ஸ்ருதி காதலில் விழுந்த வெள்ளைக்காரர்!

by Mahalakshmi

advertisement

ஸ்ருதி ஹாஸன் காதலித்தார் என்று தகவல்கள் வந்தது நடிகர் சித்தார்த்துடன்தான். இவர்கள் மும்பையில்லிவ் இன் முறைப்படி ஒன்றாகவே இருந்தார்கள். ஆனால், அந்த காதல் முறிந்துபோனது.

இப்போது மீண்டும் வெளிப்படையாக தெரியும் அளவுக்கு காதல் வயப்பட்டுள்ளார் ஸ்ருதி. கடந்த காதலர் தினத்துக்கு ஸ்ருதியுடன் கொண்டாடவே அவரது காதலர் மைக்கேல் லண்டனில் இருந்து வந்துள்ளார். இருவரும் மும்பை ஏர்போர்ட்டில் ஒன்றாக வந்தார்கள். பலரும் பார்த்து, போட்டோ எடுத்ததையும் ஸ்ருதி கண்டுகொள்ளவில்லை.

அடிக்கடி ஸ்ருதி லண்டன் சென்றுவிடுகிறார். அங்கு அவருக்கு பாய் பிரெண்ட் இருக்கிறார் என்று சொல்லப்பட்டது. அது இப்போது நிஜமாகி போனது.

ஸ்ருதி ஹாசனை காதலிக்கும் மைக்கேல் ஒரு இத்தாலியர். லண்டன் டீப் டைவிங் மென் நாடக குழுவில் நடிகராக இருக்கிறார் . லண்டனுக்கு சென்று ஒருமுறை ஒரு ராக் இசைக்குழு வில் ஸ்ருதி பாடும்போது, மைக்கேல் அறிமுகமாகி காதல் ஆகி உள்ளார்.

advertisement
Popular Posts