நடிகர்களை விட அதிக சம்பளம் பெரும் கோப்பெருந்தேவி நடிகை காட்டில் பணமழை

by Thayalan

advertisement

கடந்த 2005ம் ஆண்டில் இந்தியில் அறிமுகமாகி தமிழில் ரெயின்போ காலனி நடிகரின் படத்தில் அறிமுகமாகி வகுப்பு அறை தொடர்பான படம் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற அந்த நான்கெழுத்து நடிகையின் காட்டில் சமீபகாலமாக பணமழை பெய்து வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது.

ஆரம்பத்தில் முன்னணி நடிகர்களுடன் நடித்து இருந்தாலும் ஒரு கட்டத்தில் தமிழில் அந்த நடிகை மார்கெட் இழந்து காணப்பட்டார். ஆஞ்சநேயா பட நடிகரின் மற்றொரு படத்தில் கோப்பெருந்தேவி என்ற கேரக்டர் மூலம் மீண்டும் பேமஸ் ஆகி இழந்த மார்கெட்டை ஒரு வழியாக பிடித்தார்.

அதனை தொடர்ந்து கடந்தாண்டு வெளியான பிரமாண்ட படத்தில் அவந்திகா கேரக்டரில் நடித்து, உலக சினிமாவை திரும்பி பார்க்க வைத்தார். இதனை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளியானது. படத்தில் பெரிய ரோல் இல்லை என்ற போதிலும் அந்த படத்தில் அதிக சம்பளம் வாங்கினார்.

தற்போது டார்லிங் நடிகர் நடிக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதில் அந்த நடிகரின் சம்பளத்தை விட 2 மடங்கு கோப்பெருந்தேவிக்கு அதிகமாம். மேலும் தற்போது தமிழில் முன்னணி நடிகர்கள் வாங்கும் சம்பளத்தை விட அம்மணி அதிக சம்பளம் வாங்கி பல ஹீரோக்களை ஒவர் டேக் செய்து வருகிறார்.

advertisement
Popular Posts