மீண்டும் நடிக்க வருகிறார் சித்ரா

by Pathima

advertisement

பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த சித்ரா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் படங்களில் நடிக்க இருக்கிறார்.

கே.பாலசந்தரால் ‘அவள் அப்படித்தான்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சித்ரா.

இப்படத்தை தொடர்ந்து ‘ராஜபார்வை’ படத்தில் கமலுடன் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்தார்.குழந்தை நட்சத்திரமாக இருந்த இவர் மலையாளத்தில் மோகன் லால் ஜோடியாக ‘ஆட்ட கலசம்’ படத்தின் மூலம் நாயகியானார்.

அதற்கு பிறகு ரஜினியின் ‘ஊர்க்காவலன்’, ‘சேரன் பாண்டியன்’, ‘மதுமதி’, ‘பொண்டாட்டி ராஜ்யம்’ உட்பட 300 படங்கள் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என்று நடித்த அவர் நல்லெண்ணெய் விளம்பரத்தின் மூலம் மிகப் பிரபலமானார்.

அதற்கு பிறகு திருமணமாகி செட்டிலான அவர் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். இப்போது மீண்டும் நடிக்க இருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ‘எனது மகளை வளர்க்கும் பொறுப்பு எனக்கு இருந்ததால் நடிப்பிலிருந்து ஒதுங்கி இருந்தேன்.

இப்போது மகள் 10வது படித்துக் கொண்டிருப்பதால் இனி நடிப்பது என்று முடிவெடுத்திருக்கின்றேன். மேக்கப் போட்டு 18 வருடங்கள் ஆகி விட்டது. நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்க இருக்கிறேன்’ என்கிறார்.

advertisement
Popular Posts