நயன்தாரா ட்ரீட்! சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் மாஸ் பிளான்

by Raana

advertisement

நயந்தாராவின் தமிழ் சினிமா ட்ராக் நில்லாமல் நித்தமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தனி ஹீரோயினாக முக்கிய கதைகளை தேர்ந்தெடுத்து ஹிட் கொடுத்த அவர் இப்போது சற்குணம் தயாரிப்பில் தாஸ் ராமசாமி இயக்கத்தில் டோரா படத்தில் நடித்துள்ளார்.

ஏற்கனவே அவர் நடித்த மாயா படத்திற்கு பிறகு தற்போது டோரா மிகவும் எதிர்பார்பை தூண்டியுள்ளது. வரும் மார்ச் 3 தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில் இதன் டீசர் நாளை வெளியாகிறது.

இதற்கு நடுவில் மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயனோடு நடித்துவருகிறார். டோரா படத்தின் டீசர் சிவகார்த்திகேயன் பிறந்தநாள் அன்று வெளியாவது கூடுதல் தகவல்.

advertisement
Popular Posts