குட்டி விஜய் சேதுபதி, குட்டி த்ரிஷா- யாராவது இருக்கீங்களா? உங்களைத்தான் தேடுறாங்க!

Report
557Shares

விஜய்சேதுபதியும் த்ரிஷாவும் 96 என்ற படத்தில் நடித்து வருகிறார்கள். நடுவில கொஞ்சம் பக்கத்தை காணோம் ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் இயக்கம் இந்த படத்தில் குட்டி விஜய் சேதுபதி, குட்டி த்ரிஷா நடிப்பதற்கு பாய்ஸ் கேர்ள்ஸை தேடிக்கொண்டு இருக்கின்றனர்.

14லிலிருந்து 17 வரை வயதுடைய பாய்ஸ் கேர்ள்ஸ் யாராவது குட்டி விஜய் சேதுபதி, குட்டி த்ரிஷா போல இருந்தால் உடனே இந்த படக்குழுவை அணுகவும்.

இந்த படம் ஒரு ரொமான்ஸ் படமாம். பல வருடங்களான லவ் எப்படி நீடிக்கிறது என்பதுதான் கதை. ஆனலும் இதில் த்ரில் இருக்காம். இந்த மாத கடைசியில் படம் துவங்கப்போகிறது. இதுவரைக்கும் ஜோடி சேராத ஹீரோ, ஹீரோயின்னு தேடியதில் விஜய் சேதுபதி, த்ரிஷா ஜோடி அப்படி அமைந்துவிட்டதாம்.

இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையிலே துவங்கி, இங்கேயே படத்தின் பெரும்பான்மையான பகுதி படமாக்கப்பட போகிறது.

விஜய் சேதுபதி , த்ரிஷா கொஞ்சம் வேறுபட்ட மேக்கோவரில் இருப்பார்களாம்.

23199 total views