சிவகார்த்திகேயனுக்கு இந்த நிலையா..! வருத்தத்தில் ரசிகர்கள்

by Thayalan

advertisement

சிறந்த நடிகருக்கான சிறப்பு பரிசு விருதுக்கு அறிவிக்கப்பட்ட சிவகார்த்திகேயனால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

2009ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையிலான சிறந்த திரைப்படங்கள் விருதினை தமிழக அரசு நேற்று இரவு அறிவித்தது.

பல வருடங்களாக சதிரைப்பட விருதுகள் அறிவிக்கப்படாத நிலை இருந்தது. இந்தநிலையில், நேற்று ஒரே நாளில் 6 வருடங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டது.

அரசின் அறிவிப்பு திரைத்துறையினர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்பட்டுத்தியது.

பட்டியலில் 2011ஆம் ஆண்டிற்கான சிறந்த நடிகர் (சிறப்பு பரிசு) விருதுக்கு சிவகார்த்திகேயன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பாண்டியராஜன் இயக்கிய மெரீனா படத்திற்காக இந்த விருது அவருக்கு அளிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் கவனிக்க வேண்டியது, இந்த படம் 2012ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதி ரிலீஸ் ஆனது. எனவே இந்த படத்திற்கு எப்படி 2011ஆம் ஆண்டின் விருது அறிவிக்கப்பட்டது என்று நெட்டின்சன்கள் கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளனர்.

ஆனால் இதில் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டியுள்ளது. இந்த படம் 2011ஆம் ஆண்டே சென்சார் செய்யப்பட்டுள்ளது.

எனவே, அதன் அடிப்பையில் விருது கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பதிலளித்து வருகிறார்கள்.

advertisement
Popular Posts