டைட்டில் ஏன் "v" என்ற எழுத்திலே ஆரம்பமாகிறது? ஒளிந்துள்ள உண்மை.

by Thayalan

advertisement

நடிகர் அஜித் மற்றும் சிறுத்தை சிவா அவர்களின் கூட்டணி வீரத்தை தொடர்ந்து விவேகம் படத்திலும் இணைந்திருக்கிறது. விவேகம், ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் சிறுத்தை சிவா விவேகம் படத்தின் சுவாரஸ்ய நிகழ்வுகளை குறித்து பிரபல வலைத்தளம் நடத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார். இதில் அஜித், சிவா இணையும் படத்தின் டைட்டில்கள் "v" என்ற வார்த்தையிலே தொடங்குவதன் காரணம் என்னவென்று கேட்டதற்கு,

"V" என்ற எழுத்துக்கு எந்த செண்டிமெண்டோ அல்லது ரகசியமோ கிடையாது. உண்மையாக, நான் அஜித்தை இயக்கிய முதல் படத்திற்கு வீரம் என்பது தான் தலைப்பு என்பது தலைப்பு முடிவு செய்யும் ஒரு மணி நேரத்திற்கு முன்பு கூட எனக்கு தெரியாது.

என்ன தலைப்பு வைக்கலாம் என்று யோசித்து கொண்டிருந்தபோது வீரம் என்ற தலைப்பு க்ளிக் ஆனது. உடனே, தயாரிப்பளருக்கு போன் செய்து வீரம் தலைப்பை பதிவு செய்யும் படி கேட்டுக்கொண்டேன். தயாரிப்பளர் வெறும் வீரம் மட்டும் தானா என்று கேட்டார் நானும் ஆமாம் சார் வெறும் வீரம் மட்டும் தான் என்றேன்.

மேலும் தயாரிப்பாளரிடம் அஜித் சார் கையில் டீ டம்பளருடன் உட்கார்ந்து இருப்பது போன்ற போட்டோவுடன் வீரம் டைட்டில் கொண்ட போஸ்ட்டரை காட்டினேன். அதற்கு அவர் வீரம் படத்திற்கு வீரம் என்ற டைட்டில் ஆ என ஷாக் கொடுத்தார். அதற்கு ஆமாம் சார் "வீரம்" என்றேன். அதற்கு அஜித் சாரும் ஓகே சொன்னார். தயாரிப்பாளரும் அஜித் சார்க்கு ஏற்ற டைட்டில் இதையே வெச்சிடுங்க என்றாராம்.

advertisement
Popular Posts