அடேங்கப்பா! கமலுக்கு சவால் விடும் கருணாஸ்!

by Thayalan

advertisement

நடிகர் கமலஹாசன் தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்றும் விமர்சனம் செய்திருந்தார். அதற்கு நடிகர் கருணாஸ் பதிலடி கொடுத்துள்ளார்.

நடிகர் கமலஹாசன் மீது நல்ல மரியாதை வைத்துள்ளேன். ஆனால் அவர் சிஸ்டம் சரியில்லை என்று விமர்சனம் செய்துள்ளார். வெளியில் இருந்து கொண்டு விமர்சனம் செய்யலாம்.

களத்தில் இறங்கி போராடுங்கள். சிஸ்டத்தை மாற்ற வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறதல்லவா! என்று கூறியுள்ளார்.

மேலும் ஜி.எஸ்.டி மற்றும் கேளிக்கை ஆகிய இரட்டை வரிவிதிப்பால் திரைப்படத்துறை நெருக்கடி நிலையில் உள்ளது.

இதனால் உச்ச நட்சத்திரங்களின் படங்கள் மட்டுமே ஒடக்கூடிய நிலை ஏற்படுகிறது. தமிழ் உணர்வு சார்ந்த சிறு குறு படங்கள் வெளிவரதா சூழல் ஏற்பட்டுள்ளது.

2009ம் ஆண்டு முதல் வழங்கப்படாமல் இருந்த திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

advertisement
Popular Posts