துணை நடிகராக பணியாற்றிய சீமான் எப்படி வளர்ந்தார் தெரியுமா?

by Thayalan

advertisement

நடிகர் சீமான் சிவகங்கை மாவட்டம் இடையான்குடி அடுத்துள்ள அரணையூர் என்னும் கிராமத்தை சேர்ந்தவர். தனது 19 வயதில் சென்னை வந்தார். இயக்குனர் பாக்கியநாதன் என்பவரின் அறிமுகம் சீமானுக்கு கிடைத்தது. அதன் பிறகு சென்னையில் தங்கி சினிமாவில் வாய்ப்பு தேடினார்.

இயக்குனர் மணிவண்ணனிடம் உதவியாளராகச் சீமான் பணிபுரிந்தார். சீமான் கதையை ராசாமகன் என்ற படமாக மணிவண்ணன் எடுத்தார். அந்த படம் பெரிய அளவில் ஓடவில்லை, மணிவண்ணன் இயக்கிய அமைதிப்படை, தோழர் பாண்டியன்’ படங்களில் இணை இயக்குனராக சீமான் வேலை புரிந்தார்.

சீமான் அமைதிப்படை படத்தில் அரசியல்வாதியாக நடித்து இருப்பார். அது தான் சீமான் தமிழ் சினிமாவில் நடித்த முதல்படம், அதன் பிறகு பசும்பொன் பட கதையை இயக்க பல தயாரிப்பாளரை அணுகினார். யாரும் முன்வரவில்லை, அதன் பிறகு பாரதிராஜா அந்த படத்தை பிரபுவை வைத்து இயக்கினார்.

அப்போது பிரபு உடன் சீமானுக்கு நட்பு கிடைத்தது. அதனையடுத்து சீமான் இயக்கிய பாஞ்சாலங்குறிச்சி படத்தில் பிரபு நடித்து சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகினார்.

அதன் பிறகு சீமான் இயக்கிய தம்பி, வாழ்த்துக்கள் படம் நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. சினிமாவில் இருந்து விலகி அரசியல் பணிகளை செய்து வந்தார். தற்போது மீண்டும் சினிமாவில் படம் இயக்க உள்ளார்.

advertisement
Popular Posts