மத்திய சென்னையின் நாயகி ரகசியமாக திருமணம் செய்தது ஏன்?

by Thayalan

advertisement

தமிழில் மத்திய சென்னை படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ரம்யா பர்னா. இவர் தன்னை விட வயது குறைந்தவரான பகாத் அலிகான் என்பவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.

கன்னட மொழியைச் சேர்ந்த நடிகையான இவர் பல படங்களில் நடித்திருக்கிறார். பெங்களூரில் வசித்து வந்த இவர், அரசியல்வாதியான அப்துல் என்பவரின் மகனான பகாத் அலிகானை ரகசியமாக பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளார்.

பகாத், ரம்யாவை விட இரண்டு வயது சிறியவராயினும் இருவருக்கும் கடந்த மே மாதம் பதிவுத் திருமணம் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

”எனது தாய் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் உடல் நலம் சரியானவுடன் எங்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தவுள்ளோம் என்று இதுகுறித்து கருத்துத் தெரிவிக்கும்போது ரம்யா கூறியுள்ளார்.

advertisement
Popular Posts