சமந்தாவிற்கு போட்டியாக விஜய் சேதுபதி படத்தில் புது பொண்ணு

Report
203Shares

விஜய் சேதுபதி தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒரு முக்கியமான படம் தான் 'அநீதி கதைகள்'. ஒவ்வொரு படத்திலும் வித்யாசமாக நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அந்த வகையில் ‘அநீதி கதைகள்’ என்னும் படத்தில் புதிதாக பெண் வேடத்தில் நடிக்க உள்ளார். சமந்தாவுக்கு போட்டியாக இருக்கும் அளவிற்கு உள்ளது இந்த மாறுவேடம். மேலும் நிஜ பெண்கள் கூட அழகில் தோற்றுப்போகும் அளவிற்கு அமைந்துள்ளது.

இந்த புகைபடத்திற்கு சமூக வலைத்தளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 'உண்மையா சொல்லனும்னா என்ன விட நீங்க அழகாயிருக்கிங்க' என ஒரு பெண் கமெண்ட் தெரிவித்துள்ளார்.

தியாகராஜன் குமாரராஜாவின் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். முக்கியமான வேடத்தில் பஹத் பாசில், சமந்தா மற்றும் மிஸ்கின் நடிக்க உள்ளனர். யுவான்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இதற்கு முன்னதாக இதே போன்று விஜய் சேதுபதி பெண் வேடத்தில் இருக்கும் புகைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

7560 total views