உன் மூஞ்சி எல்லாம் எங்கள் படத்தை பார்த்தால் அது எனக்கு தான் அசிங்கம்..!

Report
119Shares

பிரபல நடிகர் சித்தார்த் தயாரித்து, நடித்த படம் அவள். இந்த படம் போன ஆண்டு ரிலீஸாகி மிக பெரிய ஹிட் அடித்தது. இந்த படத்தை சித்தார்த் நெட்பிளிஸ் நிறுவனத்திற்கு விற்றுள்ளார். அதனால் இது குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், அவள் படத்தை திரையரங்குகளில் பார்க்காதவர்கள் இனி நெட்பிளிஸ் இணையத்தில் பார்க்கலாம் என்று குறிப்பிட்டு பதிவு செய்திருந்தார்.

அதற்கு ஒருவர் தமிழ் ராக்கர்ஸ் எங்களை எப்பவும் கை விட்டது இல்லை என்று கூறினார். தமிழ் ராக்கர்ஸ் என்பது அனைத்து புதிய படத்தையும் தியேட்டரில் யாருக்கும் தெரியாமல் வீடியோ எடுத்து இணையத்தில் புதிய படங்கள் ரிலீஸான உடன் பதிவு செய்யும் இணையம்.

அதனால் அவர் அவ்வாறு கூற, இந்த ட்வீட்டை பார்த்த சித்தார்த், "உன் மூஞ்சி எல்லாம் எங்கள் படத்தை காசு கொடுத்து பார்த்தால் அது எங்களுக்கு தான் அசிங்கம். நீ அப்படியே பாரு. நன்றி" என்று கோபமாக பதில் அளித்துள்ளார்.

5837 total views