ரஜினி, கமலை அடுத்து விஜய்யின் அதிகாரபூர்வ அறிவிப்பு

Report
165Shares

கடந்த டிசம்பர் 31ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்துவிட்டு பின்னர் ரஜினி மக்கள் மன்றம் என்ற செயலியையும் தொடங்கி விறுவிறுப்பான ஆரம்பகட்ட அரசியல் பணியை செய்து வருகிறார்

அதேபோல் உலகநாயகன் கமல்ஹாசனும் வரும் 21ஆம் தேதி ‘நாளை நமதே’ என்ற கோஷத்துடன் புதிய கட்சியை ராமநாதபுரத்தில் அறிவிக்கவுள்ளார்

இந்த நிலையில் இளையதளபதி விஜய்யும் தனது ரசிகர்களை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சியாக புதிய அதிகாரபூர்வ இணையதளம் ஒன்றை தொடங்கவுள்ளார்.

இதனையடுத்து செயலியையும் அவர் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவையனைத்தும் அரசியலுக்குவர அவர் ஆயத்தமாகிறார் என்பதையே காட்டுகிறது

விஜய்யின் இணையதளம் மிகவிரைவில் தொடங்கவுள்ளதாகவும், அந்த இணையதளத்தின் முகவரி மிகவிரைவில் அறிவிக்கப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

5804 total views