விஜய்சேதுபதி படத்திலிருந்து விலகிய நதியா!

Report
147Shares

ஆரண்ய காண்டம் படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா, நடிகர் விஜய் சேதுபதியை வைத்து இயக்கு வரும் படம் சூப்பர் டீலக்ஸ்.

இப்படத்தில் பகத் பாசில், சமந்தா, மிஸ்கின், காயத்ரி, பகவதி பெருமாள் உட்பட பல பிரபலங்கள் நடிக்கின்றனர். படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைப்பதோடு, பி.எஸ்.வினோத், நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தில் ஒரு முக்கியமான வில்லி கேரக்டரில் நடிப்பதற்காக முதலில் நதியா தான் ஒப்பானதாம் செய்யப்பட்டாராம். ஆரண்ய காண்டம் படம் பிடித்திருந்ததால், இப்படத்தின் கதையை கூட கேட்காமல் படத்தில் நடிக்கு ஒப்புக்கொண்டுள்ளார்.

பிறகு படம் ஆரம்பித்த போது தான் தெரிந்ததாம், அது மிகவும் கொடூர வில்லி கேரக்டர் என. இந்த கேரக்டரில் நடித்தால் தன்னுடைய இமேஜ் பாதிக்கப்படும் என நினைத்து உடனே படத்திலிருந்து விலகியுள்ளார்.

இதனையடுத்து தற்போது அந்த கேரக்டரில் நடிப்பதற்காக நடிகை ரம்யா கிருஷ்ணன் ஒப்பானதாம் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து நதியா கூறுகையில், படத்திலிருந்து விலகியது உண்மைதான் ஆனால் அதற்கான காரணத்தை சொல்ல முடியாது என தெரிவித்துள்ளார்.

4962 total views