வைரலாகும் கீர்த்தி சுரேஷ் குடும்பத்தின் இந்த புகைப்படம்

Report
708Shares

2005-ல் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான படம் சண்டக்கோழி. விஷால் நாயகனாக நடித்த இந்த படத்தில் ராஜ்கிரண், மீரா ஜாஸ்மின், கஞ்சா கருப்பு முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

இந்த படம் விஷாலுக்கு முதல் மெகா ஹிட் படமாக அமைந்தது. இந்த நிலையில், அப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது அதே கூட்டணியில் உருவாகிக்கொண்டிருக்கிறது.

இதைத்தொடர்ந்து, சண்டக்கோழியை விடவும் இந்த இரண்டாம் பாகம் இன்னும் அதிரடியான ஆக்சன் கதையில் உருவாகிக்கொண்டிருக்கிறது.

தற்போது இந்த படத்தின் ட்ரைலரை மலேசியாவில் நடக்கும் நட்சத்திர விழாவில் வெளியிட்டுள்ளார்கள்.

மலேசியாவில் வெளியிட்ட அந்த ட்ரைலர் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் தற்போதைய படப்பிடிப்பு சென்னை, மீனம்பாக்கத்தில் உள்ள பின்னி மில்லில் அமைகப்பட்டுள்ள அரங்கில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பில் நாயகியாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ், அவருடைய குடும்பத்தினருடன் கலந்து கொண்டார்.

அவர்களுடன் இயக்குனர் லிங்குசாமி, விஷால் உள்ளிட்டோர் புகைப்படங்களை எடுத்துக் கொண்டார்கள்.

அந்த புகைப்படங்களை சமுக வலைத்தளங்களில் பதிவு செய்து வைரலாகி வருகிறார்கள்.

24498 total views