மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வரிசையில் நடிகை தமன்னா

Report
266Shares

தமிழ், மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் நடிகை தமன்னா. இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மராத்தி போன்ற பல மொழிகளில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவருடைய நடிப்பில் வெளியான பாகுபலி படம் உலக அளவில் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

இதனையொட்டி பல்வேறு விழாக்களில் கலந்துகொண்டு வந்த தமன்னா, சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற நகைக்கடை திறப்பு விழாவில் கலந்து கொள்ளும்போது, இளைஞர் ஒருவர் இவர் மீது செருப்பு வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால் வெளியில் செல்வதை சில நாட்களாக தவிர்த்து வந்த தமன்னா தற்போது மீண்டும் வெளியில் வந்துள்ளார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை தந்த நடிகை தமன்னா பக்தர்களுடன் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்துள்ளார்.

முன்னதாக கடந்த 2-ம் தேதியன்று, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் கிழக்கு கோபுர நுழைவு வாசலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 50 கடைகள் தீயில் எரிந்து நாசமாகின.

இதனால் பல்வேறு அரசியல் தலைவர்கள் கோவிலுக்கு வருகை தந்து பார்வையிடும் நேரத்தில், தமன்னாவும் வருகை தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

10912 total views