கௌதம் கார்த்திக்கின் புதுபடத்திற்கு மிஸ்டர் சந்திரமௌலி என பெயர் வைத்ததற்கு காரணம் இதுதானாம்!

by Raana

advertisement

நடிகர் கௌதம் கார்த்திக்கிற்கு ஹர ஹர மஹாதேவகி வெற்றிப்படமாக அமைந்துவிட்டது. அதே கூட்டணி அடுத்த படத்தின் டைட்டிலையும் அறிவித்துவிட்டார்கள்.

தமிழ் சினிமாவில் நவரச நாயகன் என்றால் நடிகர் கார்த்திக்கின் நடிப்பை, நகைச்சுவையை அனைவரும் ரசித்த காலங்கள் உண்டு. பல நாட்களுக்கு பிறகு அனேகன் படத்தில் முக்கிய வேடத்தில் தனுஷுடன் நடித்திருந்தார்.

அதன் பிறகு அவர் மீண்டும் இப்போது நடிக்க வந்திருக்கும் படம் சந்திரமௌலி. திரு இயக்கும் இப்படத்தின் டைட்டில் நேற்று சிவகார்த்திகேயனால் வெளியிடப்பட்டது.

ரெஜினா, வரலட்சுமி, காமெடி நடிகர் சதீஷ் ஆகீயோர் நடிக்கும் இப்படத்தின் தலைப்புக்கு சுவாரசியமான விசயம் உள்ளது. கார்த்திக் நடித்த படங்களில் முக்கியமானது மௌன ராகம். 1986 ல் வந்த இந்த வெற்றி படத்தில் அவருக்கு ஜோடியாக ரேவதி நடித்திருப்பார்.

இதில் கார்த்திக் ரேவதியின் அப்பாவை மிஸ்டர் சந்திரமௌலி என கூப்பிடுவது அந்நேரத்தில் மிக பிரபலமானதாக இருந்தது. அதனால் அவர் தனது மகனுடன் நடிக்கும் இந்த புதுபடத்திற்கு அதே டையலாக்கை டைட்டிலாக வைத்து விட்டார்களாம்.

advertisement
Popular Posts