தனுஷ் இயக்கும் படத்தை தவறவிட்ட மிக முக்கிய நடிகர்! வேறொரு நடிகருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்

Report
58Shares

தனுஷ் நடிப்பில் வெளியான மாரி படம் நல்ல வரவேற்பை பெற்றது. பாலாஜி மோகன் படத்தை இயக்க காஜல் அகர்வால், ரோபோ சங்கர், விஜய் யேசுதாஸ் என பலர் நடித்திருந்தனர்.

இப்படத்தின் 2 ம் பாகம் எடுக்கபடவுள்ளதாக தகவல்கள் முன்பே வெளியானது. தற்போது இப்படத்தின் ஷூட்டிங்கில் தனுஷ் நடித்து வருகிறார். பின் அவர் தான் இயக்கிய பவர் பாண்டி படத்தின் 2ம் பாகத்தை எடுக்கவுள்ளராம்.

தனுஷும் இப்படத்தில் பிரபல நடிகரும் நடிகை சமந்தாவின் மாமனாருமான நாகார்ஜுனா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலில் இந்த ரோலுக்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியை அணுகினார்கள்.

அவருக்கு தேதிகள் ஒத்துவரவில்லையாம். அதனால் நாகார்ஜுனா கமிட்டாகியுள்ளார். முதல் பாகத்தில் ராஜ் கிரண் சிறப்பு தோற்றத்தில் நடித்து அசத்தியதோடு பாராட்டையும் பெற்றார்.

2624 total views