சினேகன் திருமணம் குறித்து ஆர்த்தி என்ன ட்வீட் செய்தார் தெரியுமா ?

Report
1015Shares

2017 ஆம் ஆண்டு மக்கள் மத்தியில் மூன்று மாதங்கள் பேசப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சி தான் ஒரு பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்தி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்ட அனைத்து பிரபலங்களும் பெரிய அளவில் விமர்சனங்களுக்கு ஆளானார்கள். அதில் முக்கியமாக ஓவியா என்ற நடிகை மக்களின் பெரும் ஆதரவிற்கு ஆளானார்.

அந்த வகையில் சில பிரபலங்களுக்கு இந்த நிகழ்ச்சி நெகட்டிவ்வாக அமைந்தது. அப்படி பார்த்தால் அதில் ஆர்த்தியும் ஒருவர். அவர் எப்போதும் அவரது ட்விட்டர் பக்கத்தில் ஏதாவது கருத்து தெரிவித்து வருவது வழக்கம். சமீபத்தில் கூட ரஜினி அரசியல் குறித்து பேசினார்.

அந்த வகையில் தற்போது அவர் சினேகன் திருமணம் எப்போ என்று கேட்டு ட்வீட் செய்துள்ளார். சினேகன் அந்த நிகழ்ச்சியில் இறுதி வரை பயணித்தவர். இவருக்கும் மிகுந்த மக்கள் ஆதரவு இருந்தது.

இவர் தான் நிகழ்ச்சியின் தலைப்பை வெல்வார் என்று எதிர்பார்த்துவந்த நிலையில், ஆரவ் ஜெய்த்து பரிசுகளை தட்டி சென்றார். சினேகனுக்கு வயது ஆகிக்கொண்டே போகிற நிலையில் சினேகனின் தந்தை இவருக்கு திருமணம் செய்து வைக்க முயற்சிப்பதால் அனைவரும் இவரது திருமணத்தை பற்றியே இவரிடம் கேட்டு வருகிறார்கள்.

33228 total views