அஜித் மகள் பிறந்தநாளிற்கு ரசிகர்கள் செய்த காரியம் இதுதானாம்..!

Report
130Shares

தமிழ் சினிமாவில் அதிக அளவு ரசிகர்களை பிடித்தவர் அஜித். இவர் பல ஹிட் படங்களையும் கொடுத்திருக்கிறார். இவர் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

மேலும் இருவருக்கும் இரு குழந்தைகள் உண்டு. அஜித் மிகவும் எதார்த்தமானவர் என்றும் இயல்பாக பழகுவார் என்றும் அவரது ரசிகர்கள் சொல்லி கேட்டது உண்டு.

இவர் திருமணத்திற்கு பிறகு மனைவியை நடிக்க அனுமதிக்கவில்லை. இவர் எப்போதும் அவரது குழந்தைகளுக்கான நேரத்தை சரியாக செலவழிப்பார். குழந்தைகளை பார்ப்பதற்காக ஷாலினி நடிப்பில் இருந்து விலகினார்.

அந்த வகையில், இன்று அஜித் மகள் அனோஷ்காவின் 10-வது பிறந்த நாள் என்பதால் அஜித் ரசிகர்கள் கடந்த மூன்று நாளாக மதுரையில் உள்ள முதியோர் இல்லத்தில் இருக்கும் முதியவர்களுக்கு பழங்கள் மற்றும் சில உணவுகளை கொடுத்து அனோஷ்காவின் பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்கள்.

மேலும், சிவகாசியில் உள்ள அஜித் ரசிகர்கள் தெருக்களில் யாசகம் கேட்கும் ஆதரவற்றவர்களுக்கு புது துணி வாங்கி கொடுத்து அவர்களையே கேக் வெட்ட வைத்து கொண்டாடியுள்ளார்கள்.

அதைத்தொடர்ந்து, பல இடங்களில் அனோஷ்காவின் புகைப்படங்களை நோட்டீஸ் மூலம் கொடுத்தும் கொண்டாடியுள்ளார்கள்.

5252 total views