நடிகர்களிடம் பண மோசடி செய்த பெண்

by Thayalan

advertisement

பல சினிமா பிரபலங்களிடம் சலுகை விலையில் விமான டிக்கெட் எடுத்துத் தருவதாகக் கூறி, சென்னையைச் சேர்ந்த சுவேதா சுரேஷ் என்ற பெண், பணமோசடியில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது.

இந்நிலையில், நடிகர் எஸ்.வி.சேகரிடம் அவரது குடும்பத்தினருக்கு வெளிநாடு சென்று வர விமான டிக்கெட் எடுத்துத் தருவதாகக் கூறி, அவரிடமிருந்து ரூ.26 லட்சம் மோசடி செய்துள்ளார்.

இதையடுத்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில், மோசடியில் ஈடுபட்ட சுவேதா சுரேஷ் என்ற பெண்ணை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் சென்னையில் கைதுசெய்தனர்.

இவரது மோசடியில் நடிகர் எஸ்.வி.சேகர் மட்டுமல்லாமல், மிர்ச்சி சிவா, பாடகர் தேவன் ஏகாம்பரம் உள்ளிட்ட பல பிரபலங்களும் பணம் தந்து ஏமாந்துள்ளதாக விசாணையில் தெரியவந்துள்ளது.

advertisement
Popular Posts