Bigg Boss" கமலை கடுமையாக தாக்கி பேசியுள்ள கௌதமி..

by Thayalan

advertisement

தனியார் தொலைக்காட்சி நடத்தி வரும் பிக் பாஸ் எனும் நிகழ்ச்சியை உலகநாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சியின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சர்ச்சையை சர்ச்சையை கிளப்பி வருகிறது.

இந்நிலையில், Living Together Relationshipல் கமலுடன் வாழ்ந்து வந்த நடிகை கௌதமி, இந்நிகழ்ச்சி பற்றி பேசியுள்ளார். மானபங்கப்படுத்தப்பட்ட நடிகையின் பெயரை கமல் ஹாஸன் குறிப்பிட்டது சட்டப்படி தவறு என்று கடுமையாக தெரிவித்துள்ளார் நடிகை கவுதமி.

கேரளாவில் இளம் நடிகை ஒருவர் காரில் கடத்தி மானபங்கப்படுத்தப்பட்டார். அந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனி உள்பட 7 பேரை கேரளா போலீசார் கைது செய்தனர்.

நடிகையின் கடத்தலுக்கு சதித் தீட்டம் தீட்டியதாக மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பிக் பாஸ் சர்ச்சை தொடர்பாக உலக நாயகன் கமல் ஹாஸன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அந்த சந்திப்பின்போது அவர் பாதிக்கப்பட்ட கேரள நடிகையின் பெயரை குறிப்பிட்டார். இதையடுத்து நடிகையின் பெயரை குறிப்பிட்டத்தற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில் இது குறித்து நடிகை கவுதமியிடம் கேட்டபோது, இது வேதனையான விஷயம். அந்த நடிகையின் பெயரை குறிப்பிட சட்டப்படி அனுமதி இல்லை என்றுகூறியுள்ளார்.

முன்னதாக நடிகர் கமல்ஹாசனும் நடிகை கௌதமியும் 2005ம் ஆண்டிலிருந்து 2016ம் ஆண்டு வரை 13 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

advertisement
Popular Posts