மனதுக்கு பிடித்தவராக யாரும் கண்ணில் தென்படவில்லை: அஞ்சலியின் அதிர்ச்சி பேட்டி

by Thayalan

advertisement

தன் மனதுக்கு பிடித்தவராக யாரும் கண்ணில் தென்படவில்லை எனவும் தன் மனதுக்கு பிடித்தவரை இன்னும் தான் பார்க்கவில்லை எனவும் நடிகை அஞ்சலி தெரிவித்துள்ளார்.

அஞ்சலியும், ஜெய்யும் காதலிப்பதாகவும் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “எனது திரை உலக பயணம் நன்றாக போய்க் கொண்டிருக்கிறது. எனவே, காதல் கல்யாணம் பற்றி நினைக்க எனக்கு நேரம் இல்லை. என் மனதுக்கு பிடித்தவரை இன்னும் பார்க்கவில்லை. தேடிக்கொண்டு இருக்கிறேன். மனதுக்கு பிடித்தவராக யாரும் கண்ணில் தென்படவில்லை.

நாளையே அது போல ஒருவர் என் பார்வையில் பட்டால் நிச்சயம் அவரிடம் அதை கூறுவேன். என்னை திருமணம் செய்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக ஜெய் சொன்னது எனக்குத் தெரியாது. என்னையும் அவரையும் சேர்த்து வைத்து நிறைய செய்திகள் வந்து விட்டன. எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதையும் நிர்ணயிக்க முடியாது. எது எந்த நேரத்தில் நடக்குமோ அது அந்த நேரத்தில் நடக்கும் என்று நம்புகிறேன்.

நான் அரசியலுக்கு வருவதாக சொல்வதில் உண்மை இல்லை. டெல்லி சென்ற போது நாடாளுமன்றத்தை சுற்றி பார்த்தேன். உடனே நான் அரசியலுக்கு வருவதாக கூறி விட்டார்கள். எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணமே இல்லை.” என அவர் குறிப்பிட்டார்.

advertisement
Popular Posts