நடிகை தீக்‌ஷிதாவை மணக்கிறார் இசையமைப்பாளர் தரண்

by Thayalan

advertisement

இசையமைப்பாளர் தரண் – நடிகை தீக்‌ஷிதா திருமணம் வருகிற 15-ந்தேதி திருப்பதியில் நடக்கிறது.

பாக்யராஜ் இயக்கிய ‘பாரிஜாதம்’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தரண். சிம்பு நடித்த ‘போடா போடி’, ‘நாய்கள் ஜாக்கிரதை’, ‘ஆஹா கல்யாணம்’, பிரபு சாலமன் இயக்கிய ‘லாடம்’ உள்பட 25 படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

தெலுங்கு படங்களுக்கும் இசையமைத்து இருக்கிறார்.

தரணுக்கும் நகர்வலம், ஆகம் ஆகிய படங்களில் நடித்துள்ள தீக்‌ஷிதாவுக்கும் காதல் மலர்ந்தது.

இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளனர். இவர்கள் திருமணம் வருகிற 15-ந்தேதி திருப்பதியில் நடக்கிறது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி 16-ந்தேதி சென்னையில் நடக்கிறது.

தீக்‌ஷிதாவை பல வருடங்களாக காதலித்து வருவதாகவும் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் தரண் தெரிவித்தார்.

advertisement
Popular Posts