கலக்கல் நாயகனாக வலம் வந்த கரனின் இன்றைய நிலை…!!

Report
310Shares

ஒரு காலத்தில் மிரட்டலான வில்லனாக வலம் வந்தவர் கரண். இவரது இயற்பெயர் ரகு கேசவன். 1969 ஆகஸ்ட் 10ல் பிறந்தார்.

இவர் 2 வயது முதலே குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்தார். இவர் முதன் முதலில் நடித்த படம் அச்சனும் பாப்பனும் என்ற மலையாள படத்தில்தான் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

அதன்பிறகு சுமார் 70 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அதனையடுத்து வாலிப வயதில் அண்ணாமலை படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

பின்னர் கமலுடன் நடித்த நம்மவர் படம்தான் கரனை பெரிய அளவில் பிரபலமாக்கியது.

இதனை அடுத்து வில்லனாகவே நடித்து வந்தார். பின்னர் சிறிது காலம் இடைவெளி விட்டு கடந்த 2006ல் கொக்கி படம் மூலம் கதாநாயகனாக சினிமாவில் மறுபிரவேசம் கொடுத்தார்.

இதனை தொடர்ந்து கதாநாயகனாக கருப்பசாமி குத்தகைதாரர், காத்தவராயன், தம்பி வெட்டோத்தி சுந்தரம், மலையன் போன்ற பல படங்களில் நடித்தார்.

ஆனாலும் எதுவும் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. வாய்ப்புகளும் வரவில்லை. தற்போது உச்சத்துல சிவா படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். ஒரு காலத்தில் கலக்கல் நாயகனாக வலம் வந்தவர் இன்று வாய்ப்புகள் இன்றி தவித்து வருகிறார்.

12833 total views